கனவு காணும்

,
பாட்டு: கனவு காணும் 

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற  போதே, பிறக்கின்ற  போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்
பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்  தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

 Youtube - Kanavu Kaanum

0 comments: